கோவையில் 2 குழந்தைகளுடன் இளம்தாய் எங்கோ மாயம்..!!

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு .ஒர்க்ஷாப் தொழிலாளி .இவரது மனைவி மோகனபிரீதா (வயது 30) இவர்களுக்கு கோபி விக்னேஷ் (வயது 9) சுதர்சன் (வயது 7)ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 25ஆம் தேதி கணவர் பிரபு வேலைக்கு சென்று விட்டார்.மாலையில் வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி கிடந்தது.மனைவி மோகன பிரித்தா 2 குழந்தைகளுடன் எங்கோ மாயமாகிவிட்டார் .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பிரபு சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.