கோவை எட்டிமடை ரயில் தண்டவாள சுரங்கப் பாதையை பயன்படுத்த தொடங்கிய காட்டு யானை..!

கோவை: தமிழ்நாடு -கேரள எல்லை பகுதியான கோவை எட்டிமடை – வாளையார் ரயில் வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு காட்டு யானைகள் உயிரிழப்பது அடிக்கடி நடந்து வந்தது. இதை தடுக்க தென்னக ரயில்வே சார்பில் ரூ.7.49 கோடி மதிப்பு வீட்டில் தண்டவாளங்களை கடக்க வசதியாக 60 அடி அகலம் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முதன் முறையாக காட்டு யானை ஒன்று சுரங்கப்பாதை வழியாக வாளையார் அணைக்கு தண்ணீர் குடிக்க சென்றது. இந்த காட்சிகள் சுரங்கப் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சுரங்கப்பாதை வழியை பயன்படுத்த தொடங்கி விட்டால் இனி மேல் ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பது குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.