சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் முழுமையான மக்கள் பங்களிப்புடன் பூங்கா..!

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அமைந்துள்ள லட்சுமி நகர் வித்யா நகர் பகுதி வாழ் மக்கள் பங்களிப்புடன் அப்பகுதியில் பூங்கா இடத்தில் நடைபாதை, நூலகம், விழாமேடை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் என அத்தனையும் அப்பகுதி மக்களுடைய முழுமையான நிதி பங்களிப்போடு உருவாக்கப்பட்டு ஒற்றுமை விழாவோடு திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் சூலூர் தமிழ்ச்சங்கம் 14ஆம் ஆண்டு துவக்க விழா, பசுமை நிழல் அறக்கட்டளை 15 ஆம் ஆண்டு துவக்க விழா, நினைவில் வாழும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சூ.ரா. தங்கவேலு அவர்களின் நினைவக நூலகம் திறப்பு விழா நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட நடிகரும் இலக்கிய சொற்பொழிவாளர் சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முன்னதாக முன்னாள் அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் லைன் ரங்கநாதன் வரவேற்புரையாற்றினார் அரிமா சங்கங்களின் அறக்கட்டளை தலைவர் த. மன்னவன் தலைமை உரையாற்றினார் பூங்காவை வடிவமைத்தவரும் பசுமை நிழல் அறக்கட்டளை நிறுவனர், தலைவர் பொறியாளர் விஜயகுமார் அப்பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறினார் தொடர்ந்து சூலூர் தமிழ் சங்க தலைவர் பொன்முடி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்ற பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது சூலூர் காவல் நிலையத்தை பசுமை காவல் நிலையமாக மாற்றிய காவல் ஆய்வாளர் மாதையன் அவர்களுக்கு இயற்கைகாவலர் விருது வழங்கப்பட்டது பசுமை விஜயகுமார் அவர்களுக்கு பசுமை நாயகன் விருது வழங்கப்பட்டது சிறப்பான முறையில் நடைபாதை அமைத்து தந்த சந்துரு மன்னவனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .தொடர்ந்து பேரூராட்சிகளின் சிறந்த மேற்பார்வை விருது பெற்ற கோகுல் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை மூலம் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ .விஸ்வநாதன் விருது பெற்ற சூலூர் களைப்பித்தன் எழுதிய “செவிலித்தாய்” இரண்டாம் பதிப்பு பசுமை நிழல் சுந்தர் ராசு எழுதிய “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” புத்தகங்கள் வெளியிடப்பட்டது .செவிலித்தாய் புத்தகத்தை பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி வெளியிட வெற்றிச்செல்வி முத்துசாமி, ஞானசுந்தரி லோகநாதன் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்” புத்தகத்தினை இனிதா குமார் வெளியிட மலர்விழி வரதராஜன், மனோன்மணி பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வுகளை அ.சுந்தர்ராஜ் ,சூ. ப .சிவகுமார் தொகுத்து வழங்கினர். நிறைவாக ராசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் குடியிருக்கும் 300க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்..