கோவை தொழிலதிபரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை:கோவை பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபசிங் ( வயது 56) இவர் கல் குவாரி தொழில் செய்து வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக ‘அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் இனியன் என்ற முருகேசன் (வயது 53)என்பவரிடம் 3 ரூபாய் வட்டிக்கு ரூ 6 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இதற்காக நிரப்பப்படாத காசோலைகள்,மற்றும் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கொடுத்து இருந்தார்.இந்த நிலையில் இனியன் என்ற முருகேசன் அவரது நண்பர்கள் 2 பேருடன் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜான் ஜெபசிங் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து கந்துவட்டியுடன் ரூ. 10 லட்சத்து 25 ஆயிரம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து ஜான் ஜெப சிங் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.போலீசார் இனியன் என்ற முருகேசன் உட்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.இவர் தன்னை ஒரு பத்திரிக்கையில் நிருபராக இருப்பதாக கூறியுள்ளார். 3 பேர் மீதும் கந்துவட்டி தடுப்புச் சட்டம் கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவின கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.