நாய் குரைத்ததால் ஆத்திரம்.. உரிமையாளரை தாக்கிய வாலிபர்.!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள புது பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் வயது 45. வியாபாரி. இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10.30மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் 27 குடிபோதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் குமார் வீட்டின் அருகே சென்ற போது அவர் வளர்க்கும் நாய் சந்தோஷ் குமாரை பார்த்து குறைத்தது. இதில் ஆத்திரமடைந்த அவர் நாயின் உரிமையாளர் குமாரை வெளியே அழைத்து தகாத வார்த்தைகளால் பேசினார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் அங்கு கிடந்த ஓட்டை எடுத்து குமாரின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.