கோவை கை கடிகாரம் கடையில் ஷட்டர் உடைத்து பணம், வாட்ச் திருட்டு..!

கோவை கணபதி, காந்தி நகர், 3-வது கிராசை சேர்ந்தவர் ரியாசுதீன் மதானி ( வயது 63) இவர் காந்திபுரம் 100 ரோட்டில் கைக்கடிகாரம் ( வாட்ச்) கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினமும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த 8 கைக்கடிகாரங்கள் ,பணம் ரூ. 850 ஆகியவை கொள்ளையடிக்கபட்டிருந்தது.இது குறித்து ரியாசுதீன் மதானி காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.