கோவை திருச்சி சாலையில் திடீரென பற்றி எரிந்த கார்- ஆபத்தை உணராமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள்..!

கோவை மாவட்டத்தின் பிரதான சாலைகளில் ஒன்று திருச்சி சாலை. இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து என்பது பரபரப்புடன் இருக்கும். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி சாலை உழவர் சந்தை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. காரில் இருந்த ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியேறி விட்டார். ஒரு கட்டத்தில் மளமளவென பற்றிய தீ காரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த நிலையில் காரின் முன்பக்க கண்ணாடி உள்ளிட்ட சில பொருள்கள் வெடித்து சிதறிய சத்தம் அப்பகுதியில் உணரப்பட்டது. கார் ஒருபுறம் பற்றி எரிந்து கொண்டிருக்க ஆபத்தை உணராத சில வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவ்வழியே பக்கவாட்டில் பயணித்துக் கொண்டிருந்தனர். காரின் சில பொருட்கள் வெடித்து உடைந்து சிதறிய சத்தம் கேட்டு வாகன ஓட்டிகள் சிலர் அச்சத்தில் உறைந்தனர். இது குறித்த தகவல் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பீளமேடு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் ஏற்பட்ட தீயின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாராபுரம் சொக்கம்புதூர் பகுதியில் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென மின்கசுவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதும், தீ எரிய தொடங்கியதும் சதீஷ்குமார் காரை விட்டு வெளியேறியதும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப நாட்களாக சிலைகள் கடத்தப்படுவதாகவும், இவ்வாறு கடத்தப்பட்ட சிலைகள் கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் தமிழ்நாட்டில் அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கோவை மாவட்டம் உக்கடத்தின் செல்வபுறம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள பாஸ்கர சுவாமிகள் எனும் சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அப்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 200 கிலோ எடையுடைய 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகர் சிலை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். சிலைக் கடத்தல் குழுவுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகித்துள்ளனர். ஆனால் பாஸ்கர சுவாமிகள் இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார். மேலும், இந்த சிலையை தானே செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கான ஆதாரத்தை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக யூடியூபில் சிலை தயாரிப்பது குறித்து தான் பார்த்த வீடியோவை காட்டியுள்ளார். ஆனால் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் பாஸ்கர சுவாமிகளிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த பிப்ரவரி மாதம் 7 பழங்கால சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயன்றதாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேபோல கடந்த மாதம் 4ம் தேதி நெல்லையில் 5 ஐம்பொன் சிலைகள் நடராஜன் என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதிரடி சோதனை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிலைகளை மீட்டு நடராஜனை கைது செய்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்று சிலை பதுக்கல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதோடு கையெடுத்து கும்பிட்டு பேசிய அவர்.. இந்த வீடியோக்களை பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு அனுப்புவேன். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு அனுப்புவேன். உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்புவேன். தேர்தல் ஆணையத்திற்கு இந்த வீடியோவை அனுப்புவேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்க இவர்கள் மோசமாக திட்டம் போடுகிறார்கள்.

ஜனநாயகத்தை நசுக்க இவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். உங்களிடம் கையெடுத்து கும்படுகிறேன், இந்த வீடியோக்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. இந்த வீடியோவில் இருக்கும் நபர்களில் ஒருவர் துஷார். இவர் அமித் ஷாவின் ஆள், பாஜக சார்பாக வயநாட்டில் இவர் போட்டியிட்டார். இவர்தான் ஆட்சியை கவிழ்ப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்.

மேற்கொண்டு பேசிய கேசிஆர்.. பிரதமர் மோடியிடம் சொல்கிறேன்.. நானும் உங்களை போல்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர். உங்களை போல அரசியலமைப்பு சட்ட ரீதியாக நானும் ஆட்சி செய்துதான் வருகிறேன். இது போன்ற மோசமான சதித்திட்டங்களை நிறுத்துங்கள். இது நல்லதற்கல்ல. உங்களுக்குத்தான் இது அசிங்கத்தை ஏற்படுத்தும் என்று கே சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சமீபத்தில் ரங்கா ரெட்டி பகுதியில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணத்தை வைத்து பேரம் பேசிய சம்பவத்தில் பாஜகவிற்கு தொடர்புடைய 4 பேர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ இன்று முதல்வர் ஸ்டாலினுக்கும் கே சந்திரசேகர ராவ் சார்பாக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்எல்ஏக்களிடம் பேரம் பெற பேச முயன்றது தொடர்பான வீடியோவை அவர் இன்று காலை ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவை எதிர்ப்பதில் கேசிஆர், ஸ்டாலின் ஆகியோர் ஒற்றுமையாக இருக்கின்றனர். பாஜகவிற்கு எதிராக இவர்கள் ஒருமித்த குரலில் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.