நாட்டுக்காகவும், சமுதாயத்திற்கும் சேவையாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு : ஹிந்துஸ்தான் சாரண – சாரணியர் இயக்க 

நாட்டுக்காகவும், சமுதாயத்திற்கும் சேவையாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு : ஹிந்துஸ்தான் சாரண – சாரணியர் இயக்க 

ஹிந்துஸ்தான் சாரணர், சாரணியர் இயக்கத்தின் சார்பாக காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்க தேசிய ஆணையர் கே.எஸ்.செளஹான் , கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்:

சாரணர், சாரணியர் இயக்க வழிகாட்டுதலின் நோக்கம் , இளைஞர்களை உடல், மன, சமூக, ஆன்மிகம் மற்றும் உணர்வு ரீதியில் வலிமையான மற்றும் பயனுள்ள குடிமக்களாக மாற்றுவதாகும். பல கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் உள்ளார்ந்த திறனை வளர்ப்பதே சாரண, சாரணியர் இயக்கத்தின் வழிகாட்டுதலின் நோக்கமாகும். அலகு மட்டத்தில் வழங்கப்படும் செயல்பாடுகள், திட்டங்களின் கலவை மற்றும் முற்போக்கான முன்னேற்றத் திட்டத்தின் மூலம் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை வழங்கும் கட்டமைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் மூலம் இலக்கு அடையப்படுகிறது. முற்போக்கு முன்னேற்றமானது ஒவ்வொரு வயதினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பணத்திற்காக செய்யும் எந்த செயலும் சேவையாக கருத முடியாது. நாட்டுக்காகவும், நமது சமுதாயத்திற்கும் செய்யும் சேவை வலிமையானது என்பதை அனைவரும் உணர வேண்டும் எனத் தெரிவித்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாரண இயக்கத்தின் நான்கு பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்கள், இந்தியா மற்றும் வெளி நாடுகளில் மேற்படிப்பு படிக்கவும், ராணுவம், துணை ராணுவ, ரயில்வே, மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கொட்டிக் கிடப்பதாக தெரிவித்தார்.