வால்பாறையில் சிறுத்தை தாக்கி 5 வயது சிறுவன் காயம்..!

கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாடா காப்பி நிறுவனத்திற்கு சொந்தமான சங்கிலிரோடு பேக்டரி டிவிசன் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநிலம் ஜார்க்கண்டை சேர்ந்த பிப்பையா மாகாளி மற்றும் கீத்தாதேவி ஆகியோர்களின் மகன் சிறுவன் ஆகாஷ் வயது 5 என்பவர் இன்று தனது குடியூருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகேயுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து வந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக சிறுவனை தாக்கியதில் சிறுவனின் வலது கை முட்டி பகுதியில் சிறுத்தையின் நகக்கீறல் காயம் ஏற்பட்டது . உடனே சம்பந்தப்பட்ட பன்னிமேடு தோட்ட நிறுவன மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் சிறுவனை தாக்கிய சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் வனத்துறை மூலம் காயமடைந்த சிறுவனுக்கு நிவாரண உதவி வழங்கவும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த வால்பாறை திமுக நகரச் செயலாளர் குட்டி, நகர்மன்ற துணைத் தலைவராக த.ம.ச.செந்தில் குமார் மற்றும் நகர நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்து அவரின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். இச்சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..