கோவையில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்தில் 4 பேர் பரிதாப பலி..

கோவை :  திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள தாசரபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 37 ) இவர் நேற்று பசூர்- மொண்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கீழே விழுந்தார் . இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மனைவி ஸ்ரீவித்யா அன்னூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் மணி, அவரது மகன் கவுதம் (வயது 20) இவர் நேற்று பைக்கில் சேலம் -பாலக்காடு ரோட்டில் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது . இதில் கவுதம் படுகாயம் அடைந்தார். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது தாயார் வேலுமணி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்

. பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டி செம்பா கவுண்டர் காலணியை சேர்ந்தவர் நாகராஜ் ,இவரது மனைவி இந்துமதி ( வயது 31)இவர் தனது கணவருடன் பைக்கில் பொள்ளாச்சி- செம்பா கவுண்டர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் பின்னால் இருந்த இந்துமதி திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கணவர் நாகராஜன் மீது பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பக்கம் உள்ள முட்டி காடு பகுதியை சேர்ந்தவர் சரசு (வயது 63)இவர் நேற்று கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் சரசு படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் நடந்த வெவ்வேறு விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..