சைக்கிள் கடையில் 28 கியாஸ் சிலிண்டர் பறிமுதல் – முதியவர் கைது..!

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, கோதுமை, மானிய விலை சிலிண்டர் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் பறக்கும் படை துணை தாசில்தார் முத்துமாணிக்கம் ஆகியோர் இணைந்து நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கோவை குனியமுத்தூர் ரோடு அம்மன் கோயில் தெரு ராமலிங்கம் என்பவரது சைக்கிள் கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்குஎவ்வித அனுமதியும் உரிமையும் இன்றி பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் 28 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றபட்டது. அதன் உரிமையாளராண பிருந்தாவன் தெருவை சேர்ந்தராமலிங்கம் ( வயது 60) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குனியமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலையில் எரிவாயு சிலிண்டர்களை வாங்கி அதனை டீக்கடை ஒட்டல்கள் மற்றும் வட இந்திய நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.அவரிடமிருந்து. 28 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்பறிமுதல் செய்யப்பட்டது. ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.