திமுக அரசு ஓராண்டு நிறைவு செய்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றார். கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மெரினா செல்வதற்கு முன் ஆர்.கே.சாலையில் சாதாரணக் கட்டண அரசுப் பேருந்தில் ஏறி ‘இலவசப் பேருந்து திட்டம்’ குறித்துக் கேட்டறிந்தார்.
திமுக அரசு ஓராண்டு நிறைவு செய்ததையடுத்து சென்னை மெரினாவில் தலைமைச் செயலக மாதிரியுடன் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்.
பின்னர் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
Leave a Reply