அரசுப் பேருந்தில் ஏறி மக்களோடு மக்களாக பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- இன்ப அதிர்ச்சியில் பயணிகள்.!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

அதைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கலைஞரின் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

மெரினா கடற்கரைக்கு செல்லும் வழியில் தனது காரை நிறுத்துமாறு கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்ற பேருந்தில் ஏறி பொதுமக்களிடம் பேசினார். கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சரிடம் ஒயிட் போர்டு பேருந்து குறைவாக இருப்பதாக பெண்கள் கூறினர்.