கோவையில் தடையை மீறி மது விற்ற 14 பேர் கைது -192 மதுபாட்டில் பறிமுதல்..!

கோவை : திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று அரசு மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து இருந்தது .இதை மீறி கோவையில் பல இடங்களில் மதுவிற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் உள்ளூர் காவல் நிலைய போலீசாரும் நேற்று தீவிர சோதனை நடத்தினார்கள். மதுவிலக்கு போலீசார் சிங்காநல்லூர் இருகூர் ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடையில் நடத்திய சோதனையில் கடைக்கு அருகே நின்று கொண்டு அதிக விலைக்கு மது விற்றதாக ஆறுமுகம்  (வயது 51) கைது செய்யப்பட்டார் .அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல குனியமுத்தூர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள டாஸ்மாக்கடை முன் மது விற்றதாக திருப்பூர் பிரகாஷ் (வயது 38)கைது செய்யப்பட்டார். 8.மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியில் மது விற்றதாக ஆவுடையார் கோவில் விஜயபாஸ்கர் (வயது 26) கைது செய்யப்பட்டார் .11 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

காட்டூர் போலீசார்நடத்திய சோதனையில் காந்திபுரம் லஜபதி ராய் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை முன் மதுவிற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் சுவாதிராஜன் ( வயது 47) கைது செய்யப்பட்டார் .12 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டனர்.

கிராஸ் கட் ரோடு 9-வது வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவிற்ற புதுக்கோட்டை மாவட்டம் பாஸ்கரன் (வயது44 ?கைது செய்யப் பட்டார் .10 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டது.

போத்தனுர் போலீசார் சாரதா மில் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன் மதுவிற்றதாக ஆவுடையார் கோவில்,தச்சம் பள்ளியைச் சேர்ந்த பாலு (வயது 40) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 56 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் நேற்று மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் நடத்திய வேட்டையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். 192 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.