அதிமுகவில் இனி கவுண்டர்கள் மட்டுமே முதல்வராக முடியும்- பொதுமேடையில் செங்கோட்டையன் சர்ச்சை பேச்சு..!

கோவை: அதிமுகவில் இனி கவுண்டர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது, அதிமுக ஜாதிக்கட்சி என்பதை உறுதி செய்துள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு உடைந்து, மீண்டும் ஒட்டி, தற்போது மீண்டும் பிரிந்துள்ள அதிமுக ஜாதி கட்சியாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

அதிமுகவில் எடப்பாடி எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர், அதிமுகவை முக்குலத்தோர் கட்சியாக மாற்ற தீவிரம் காட்டும் நிலையில், எடப்பாடி தலைமையிலான தலைவர்கள், கவுண்டர்கள் கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி ஆதரவாளரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவில் இனி கவுண்டர்கள் மட்டுமே முதல்வராக முடியும் என தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.