கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் விக்னேஷ் ( வயது 31 )இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த விக்னேஷ் நேற்று மாலையில் சென்னைக்கு செல்ல மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையம் அருகில் உள்ள மது கடைக்கு சென்று மது குடித்தார் .இரவு நேரம் ஆகிவிட்டதாலும், போதை அதிகமானதாலும் அங்குள்ள அண்ணாஜிராவ் ரோட்டில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் அருகில் படுத்து தூஙங்கி விட்டார். அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் தினேஷை எழுப்பி ஏன் இங்கு தூங்குகிறாய்? என்று கேட்டனர். இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த ஆசாமிகள் விக்னேசை தாக்கி ‘கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் போலீஸ்காரர் விக்னேஷ் காயமடைந்தார். அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் விக்னேசை தாக்கிய வெள்ளி பாளையம் ரோடு, சீரங்க ராயன் ஓடையை சேர்ந்த கவின் என்ற கருப்பசாமி ( வயது 20 ) சிறுமுகை ரோடு வ. உ. சி .வீதியை சேர்ந்த விவேகானந்தன் என்ற சக்திவேல் (வயது 21 )ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply