கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது: கோவையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்..
கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒடுக்க மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாநகர பகுதிகளில் மட்டுமல்லாமல் மாவட்ட புறநகர் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவத்தூர் பிரிவு
பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சைமன்ராஜ்(24) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் 3 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Leave a Reply