தமிழகத்தில் பருத்தி பரப்பளவு 11 சதவீதம் அதிகரிப்பு வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல்

தமிழகத்தில் பருத்தி பரப்பளவு 11 சதவீதம் அதிகரிப்பு வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல்

 

தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்தின் பருத்திக்கான விலை ரூ.6,500 விருந்து 7000 வரை இந்த ஆண்டுக்கு கணித்து முன்னறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

 

இதுகுறித்து தமிழ்நாடு வேளாமைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆயவு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, பருத்திக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. அமெரிக்க வேளாண் துறையின் மதிப்பீடுகளின் படி, உலகளவில் 2022-23ஆம் ஆண்டு பருத்தி 33.4 மில்லியன் எகடர் பரப்பளவில் 152.41 மில்லியன் பேல்கள் உற்பத்தி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா, உலக பருத்தி உற்பத்தியில் 22 சதவீ’தத்தைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2022-23-ஆம் ஆண்டில் 28.50 மில்லியன் பேல்களையும், அதனை தொடர்ந்து சீனா 26.80 மில்லியன் பேல்கள், பிரேசில் 72.50 மில்லியன் பேல்கள் மற்றும் பாகிஸ்தான் 5 மில்லியன் பேல்களையும் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஜவுளிஅமைச்சகத்தின் படி, 202122-ஆம் ஆண்டில் இந்தியாவில் பருத்தி சாகுபடி பரப்பளவு 123.50 இலட்சம் எகடராக இருந்தது, இது முந்தைய ஆண்டு 132.85 இலட்சம் எக்டராக இருந்தது. மாநிலங்களில் 2021-22-ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா 41.82 இலட்சம் எக்டரில பருத்தி சாகுபடி செய்து முதலிடத்திலும் அதனை தொடர்ந்து குஜராத் (22.55 இலட்சம் எக்டா), தொலுங்கானா (20.57 இலட்சம் எக்டர்) இராஜஸ்தான் (7.56 இலட்சம் எக்டர்) மற்றும் காநாடகா (6.91 இலட்சம் எகடா) ஆகியவை பருத்தி சாகுபடி செய்யும் முக்கிய மாநிலங்களாக உள்ளது.

இந்தியா, 2021-22 ஆம் ஆண்டு 4.0 மில்லியன் பேல்கள் பருத்தியை பங்களாதேஷ், சீனா, வியட்நாம் மற்றும் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், அமெரிக்கா, பிரசில், எகிப்து மற்றும் பிறநாடுகளிருந்து சுமார் 18 மில்லியன் பேல்களை இறக்குமதியும் செய்துள்ளது. உலக பருத்தி நுகர்வில், இந்தியா 22 சதவீதத்தைக் கொண்டு மிகப் பெரியநுகாவோராக திகழ்கிறது. இந்த ஆண்டில் பருத்தியின் இருப்பு சுமார் 45.46 இலட்சம் பேல்களாக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட குறைவாகும் இருப்பினும், உலகசந்தையின அதிகளவு இருப்பு, நடப்பு பருவத்தில் பருத்தி சாகுபடியின் அதிக பரப்பளவு மற்றும் உலக சந்தையில குறைந்து காணப்படும் தேவை ஆகியவை சம்பா நாட்களில் பருத்தி விலை வீழ்ச்சிக்கான காரணங்களாகும்.

2021-22-ஆம் ஆண்டில் பருத்தியானது சுமார் 1.25 இலட்சம் எக்டர் பரப்பளவில் தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு 2.96 இலட்சம் பேல்கள் (1 பொதி-170 கிலோ) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முந்தைய பருவத்துடன் ஒப்பிடும் போது நடப்புப் பருவத்தில் 11 சதவீதம் பருத்தி பரப்பளவு அதிகரித்துள்ளது. பெரம்பலூர், சேலம், திருச்சி, தாமபுரி, அரியலூர் மற்றும் கடலூர் ஆகியவை பருத்தி உற்பத்தி செயயும் முக்கிய மாவட்டங்களாகும். தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய இரகங்கள் ஆர்.சி.எச்., சுரபி மற்றும் டி.சி.எச் ஆகியவை ஆகும். பருத்தி ஆலையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப குஜராத், மகராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

இச்சூழலில் பருத்தி விவசாயிகள் பருத்தி விற்பனை மற்றும் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்புத் திட்டமானது, கடந்த 26 ஆண்டுகளாக கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆயவுகளை மேற்கொண்டது, ஆயவுகளின் அடிப்படையில, தரமான பருத்தியின் பண்ணை விலை (ஆகஸ்ட் முதல் அக்டோபர்: 2022 வரை) குவிண்டாலுக்கு ரூ.8,000 முதல் ரூ.8,500 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுளளது. எனவே, விவசாயிகள் மேற்கண்ட விலையின் அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள

 

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்

 

வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டுஆய்வு மையம்,

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

 

கோயம்புத்தூ-641 003.

 

தொலைபேசி! -0422-6611278

 

மேலும் தொழில் நுட்ப விவரங்களுக்கு,

 

பேராசிரியர் மற்றும் தலைவர்,

 

பருத்தி துறை,

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

 

கோயம்புத்தூர் – 641 003.

 

தொலைபேசி எண் – 0422-2450507 விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.