கோவையில் தேர்தல் விதிகளை மீறியதாக 271 புகார்.!!

கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் – பரிசுப் பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்க கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டது. அதை தொடர்பு கொள்ள கட்டணமில்லா எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு தற்போது வரை 271 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் 186 புகார், செல்போன் வாயிலாக 72 புகார், சமூக வலைதளம் மூலம் 16 புகார் ,என மொத்தம் 271 புகார் வந்தது. அதில் 270 களுக்கு தீர்வு காணப்பட்டது. ஒரு புகார் மீது விசாரணை நடந்து வருகிறது. கட்சி கொடி கம்பம் போஸ்டர்களை அகற்றவில்லை என்று பெரும்பாலான புகார் வந்தது என்றார்..