உலகமே வியக்கும் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட திருச்சி விமான நிலையம்…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாட்டிற்கு பயணிக்கும் பலர் திருச்சி விமான நிலையத்தை முக்கியமாக பயன்படுத்தி வரும் நிலையில் திருச்சி புதிய மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அதையடுத்து கொரோனா லாக்டவுனால் பணிகள் தொய்வடந்த நிலையில் மீண்டும் மும்முறமாக பணிகள் நடக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு தயாராகியுள்ளது. இதற்காக மத்திய அரசு சுமார் 1,112 கோடியை செலவு செய்து இந்த விமான நிலையத்தை தயார் செய்துள்ளது. மொத்தம் 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த விமான நிலையம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரிய அளவிலான கட்டிட அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்தின் கட்டிடம் பறவை போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு உள்ளே கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோவில், விசிலிக்கா உள்ளிட்ட தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்று தொன்மை வாய்ந்த கட்டிடங்களின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இது திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நிறம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு 3500 பயணிகளை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்தில் இருந்து பயணம் செய்ய முடியும். இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பேருந்துகள் ஆகியவற்றை நிறுத்த இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 16 வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த விமான நிலையத்தை முழுவதுமாக 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கோபுரம் மூலம் விமான நிலையத்தை முழுமையாக கண்காணிக்க முடியும். இந்த விமான நிலையத்தின் கட்டமைப்பே மிக வித்தியாசமாகவும் நூதனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இப்படியான கட்டமைப்புக்காக நான்கு ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியே முடியாத படி மறுசுழற்சி முறையில் அந்த கழிவு நீரை பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளார்கள். மேலும் இந்த விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை அங்கிருந்தே தயார் செய்யும் வகையில் மூன்று மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ள சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விமான நிலையம் பசுமையான விமான நிலையமாக மாறி உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு உட்புறம் 47 செக் இன் கவுண்டர்கள், 10 போர்டிங் பாலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்கே விமானங்களை நிறுத்தி வைக்கும் புதிய ஏப்ரான் பகுதி, டாக்ஸி பாதைகள், விமானத்தை தனிமைப்படுத்தும் பகுதி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை கண்காணிக்கும் கண்ட்ரோல் ரூம், சப்போர்ட் செய்யும் கருவிகள் கொண்ட ரூம், ரேடர்கள், ரேடார் சிமுலேஷன், ஆட்டோமேஷன், விஹெச்எஃப், மற்றும் ஏஏஐ அலுவலகங்கள், மெட்டாலஜிக்கல் அலுவலகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இந்த விமான நிலையம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட விமான நிலையமாக மாறி உள்ளது. சர்வதேச விமானங்களை இந்த விமான நிலையம் அசால்டாக கையாளும் வகையில் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம் என்பது சர்வதேச அளவில் மிக முக்கியமான விமான நிலையமாக மாறி உள்ளது தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் பணியாற்றும் பலர் சென்னையை விட திருச்சி விமான நிலையத்தை தான் அதிகம் தேர்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இந்த வசதி மிக சிறப்பான வசதியாக இருக்கும்.