கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்ற 77 பேர் கைது. 764 மது பாட்டில்கள் பறிமுதல்…

கோவை ஜன 18 திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது .அத்துடன் அன்றைய நாளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . கோவை மாநகர் பகுதியில் கண்காணிப்பைதீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்தினார்கள் அதுபோன்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் மாநகர பகுதியில் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, பீளமேடு, ஆர். எஸ். புரம், உக்கடம், காட்டூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 184 மதுபாட்டிற்கு பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோலகோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் புறநகர் மாவட்ட பகுதிகளான பொள்ளாச்சி, சூலூர் | கருமத்தம்பட்டி ஆனைமலை மேட்டுப்பாளையம் அன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை செய்தனர். இதில் பெட்டிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 58பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 580 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் கோவை மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து 77 பேர் கைது செய்யப்பட்டனர்.. அவர்களிடமிருந்து 764 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.