22 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் தங்கம் மோசடி- ஊழியர்கள் 4 பேருக்கு வலை..!

கோவை சாமி அய்யர் புது வீதியை சேர்ந்தவர் சங்கர் ( வயது 45) தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த அனிமேஷ் அஸ்ரா, ராம் புருசித் அஸ்ரா, சுராஜித் அஸ்ரா, சத்யஜித் அடக் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.இவர்களிடம் கடந்த 21-9-22 அன்று 500.165 கிராம் தங்கத்தை நகைகள் செய்ய கொடுத்தார்.வெளியே சென்று விட்டு பட்டறைக்கு வந்த போது 4 பேரையும் காணவில்லை 500.165 கிராம் தங்கத்துடன் 4 பேரும் எங்கோ தலைமறைவாகிவிட்டனர். இதன் மதிப்பு ரூ. 22 லட்சம் இருக்கும் . இதுகுறித்து சங்கர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்கள்.