கர்நாடகவில் விறுவிறுப்புடன் தொடங்கியது வாக்குபதிவு..!

ர்நாடகத்தில் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்..

கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

இந்தியா முழுவதும் உற்று நோக்கும் இந்த தேர்தலுக்காக, தமிழ்நாட்டிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடந்த 8ம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை சரியாக 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தினர். தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேலும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மியில் 209 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக 918 பேர் களத்தில் உள்ளனர். கர்நாடகாவில் தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது மொத்தம் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.