கோவை ரயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி..

கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வலது புறம் மார்பு மற்றம் வலது காலில் ஒரு மச்சம் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்வருகின்றனர்.