அமைச்சரவை மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்..!

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது..

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில்‌ நடைபெறும்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ மற்றும்‌ அவற்றை செயல்படுத்தும்‌ நடைமுறைகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சட்ட பேரவையில்‌ நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்‌ குறித்து ஆலோசித்து அவற்றிற்கு ஒப்புதல்‌ அளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள்‌ மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ வெளிநாட்டுப்‌ பயணம்‌ மேற்கொள்ள இருப்பது குறித்தும்‌ கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல அமைச்சரவை மாற்றம் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.