மனைவிக்கு கொலை மிரட்டல்- கணவர் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால் ரோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32) கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரும் ஆவராம்பாளையம் ஷோபா நகரைச் சேர்ந்த பூங்கொடி (வயது 31) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி பூங்கொடி பீளமேட்டில்
உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சசிகுமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் . இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் பூங்கொடி நேற்று மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தார் . அப்போது அங்கு சென்ற சசிகுமார் அவரை பலர் முன்னிலையில் தகாத வார்த்தைகளால்,பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து பூங்கொடி பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சசிகுமாரை கைது செய்தார். இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.