வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் – வங்கி அதிகாரி உட்பட 4 பேர் மீது வழக்கு.!!

கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷினி (வயது 26) இவரது கணவர் அபிலாஷ் (வயது 29) இவர்களுக்கு 27-1 -20 22 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 73 பவுன் நகைகளும், ரூ. 15 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. கணவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்து 3 மாதத்தில் மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் கணவர் அபிலாஷ், அவரது தாயார் ரேணுகா வயது 57 தந்தை ஜெயப்பிரகாஷ் ( வயது 62) தங்கை சுபிஷா (வயது 22) ஆகியோர் சேர்ந்து ரோஷினிடம் ரூ. 5லட்சமும் காரும் வாங்கி வருமாறு கூறி மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து ரோஷினி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் கணவர் அபிலாஷ் மாமியார் ரேணுகா, மாமனார் ஜெயபிரகாஷ், நாத்தனார் சுபிக்ஷா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் வரதட்சனை கொடுமை உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..