ஓசி சிகரெட் கொடுக்க மறுத்த வியாபாரி மனைவியை தாக்கி கடை உடைப்பு ஊராட்சி துணைத் தலைவர் கைது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் குணசீலன் (வயது 53) இவரது கடைக்கு நேற்று முன்தினம் வடவள்ளி ஊராட்சி துணை தலைவரான அதிமுகவை சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியம் சென்றார். அப்போது கடையில் குணசீலனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் குடிபோதையில் இருந்த பாலு பணம் கொடுக்காமல் சிகரெட் கேட்டார். இதுபோன்று அடிக்கடி சிகரெட் வாங்கி விட்டு பணத்தை கொடுக்காமல் சென்றதால் குணசீலனின் மனைவி அவருக்கு சிகரெட் கொடுக்கவில்லை. இதனால் ஆத்தர்மடைந்த பாலு தகாத வார்த்தைகளால் பேசியதோடு அவரை தாக்கினார். மேலும் கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார் .இதை அருகில் பேக்கிரி நடத்துபவர் தட்டி கேட்டார். உடனே அவரது பேக்கரியில் இருந்து பொருட்களையும் பாலு சூறையாடினார் .மேலும் காரை ஏற்றி உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார் . இது தொடர்பாக வியாபாரி குணசீலன் காரமடை போலீசில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஊராட்சி துணைத் தலைவரான பாலு என்ற பாலசுப்பிரமணியத்தை நேற்று கைது செய்தனர்.இவர் மீது 6 பிரிவின் கீழ். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..