போப் ஆண்டவரின் தூதர் கோவை வந்தார்-விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

கோவை: போப் ஆண்டவரின் இந்தியா, நேபாள நாடுகளுக்கான தூதர் லெயோ பொல்தோ ஜிரெல்சி.இவர் கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வாடிகன் நகரிலிருந்து விமானம் மூலம்  கோவை வந்தார்.அவருக்கு கோவை விமான நிலையத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு கோவை பெரிய கடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்துக்கு சென்றார்.அங்கு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் பங்கேற்கிறார் .நாளை( ஞாயிற்றுக்கிழமை) காலை 7:45 மணிக்கு கருமத்தம்பட்டி செல்லும் அவருக்கு சிறப்பான வரவேற்ற அளிக்கபடுகிறது. அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பிற்பகல் 3- 15 மணிக்கு புலியகுளம் அந்தோணியார் ஆலயத்துக்கும், மாலை 4 மணிக்கு கோவை புதூரில் உள்ள குழந்தை ஏசு ஆலையத்துக்கும் , மாலை 5- 45 மணிக்கு காட்டூரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்திற்கும் செல்கிறார் .நாளை மறுநாள் ( திங்கள்கிழமை) காலை 11 15 மணிக்கு சவரிபாளையம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்துக்கு செல்லும் போப்பின் தூதர் லேயோ பொல்தோ ஜிரெல்சி சிறப்பு திருப்பலியில் பங்கேற்கிறார் .மதியம் 2 – 15மணிக்கு கோவையில் இருந்து விமானம்மூலம் புறப்பட்டு செல்கிறார். இவரது வருகையை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.