பெண் ஊழியர் மானபங்கம் செய்து கொலை மிரட்டல் – கோவை ஓட்டல் அதிபர் கைது..!

கோவை போத்தனூரில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் செரிப் என்ற செல்வராஜ் ( வயது 40) இவர் குறிச்சி, காந்திஜி ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே கேட்ரிங் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் ஈரோட்டை சேர்ந்த பவித்ரா ( வயது 21) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.நேற்று பவித்ரா ஓட்டலில் தனியாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜ் அங்கு சென்றார். பின்னர் பவித்ராவை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்தாராம்.உடனே பவித்திர சத்தம் போட்டார்.அவரது வாயை பொத்தி .சத்தம் போட்டாலோ,இது குறித்து யாரிடமாவது கூறினாலோ கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். இது பற்றி பவித்ரா போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஓட்டல் அதிபர் செரிப் என்று செல்வராஜ் மீது மான பங்கம்,கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.அவர்நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.