சிங்காநல்லூர் ரயில்வே கேட்டை சேதப்படுத்திய லாரி டிரைவருக்கு சிறை.!!

கோவையில் கடந்த 11-ம் தேதி இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரி இரயில்வே கேட்டின் மீது மோதி ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் லாரி டிரைவர்கேட்டை சேதப்படுத்திவிட்டு அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரயில்வே பாதுகாப்பு படை சேலம் கோட்ட ஆணையர் சவுரவ் குமார்,உதவி ஆணையர் ரதீஷ் பாபு ஆகியோர் உத்தரவின் பேரில், கோவை ஆய்வாளர் கிரீஸ்,உதவி ஆய்வாளர் பாலையா போலீஸ்காரர் ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படையினர்கடந்த ஒரு வாரமாக குற்றவாளியை தேடி வந்ததனர்.. சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், நேரடி சாட்சிகளை விசாரித்தும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரியை அடையாளம் காண முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில்நேற்று சேலம் வாழப்பாடியை சேர்ந்த விஷ்ணுவர்தன் ( வயது 22 )என்றலாரி டிரைவரைகைது செய்தனர்., லாரியை பறிமுதல் செய்தும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.லாரி டிரைவர் விஷ்ணுவர்தன்நீதிமன்றத்தில் ஆஜரிப்படுத்தப்பட்டு கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.