விபத்தில் சிக்கியவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்காததால் ஒரே நேரத்தில் 4 அரசு பஸ்கள் ஜப்தி.!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி பகுதியை சேர்ந்தவர்கள் காவேரி அம்மாள், சண்முகப்பிரியா, சுசிலா, கண்ணம்மாள் இவர்கள் கடந்த 20 19 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வேலைக்காக மேட்டுப்பாளையம் சென்று விட்டு பின்னர் பஸ்சில் காரமடை திரும்பினார்கள்: அவர்கள் அனைவரும் காரமடை அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் அவர்கள் சென்ற பஸ் மீது மோதியது .இந்த விபத்தில் காவேரி அம்மாள், சண்முகப்பிரியா, சுசிலா, கண்ணம்மாள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கைவிசாரித்த நீதிபதி விபத்தில் வழக்கில் படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தலா ரூ.1லட்சத்து 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நஷ்ட ஈடு எதுவும் வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து அந்த 4பேர் சார்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ராஜலிங்கம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.. இதை தொடர்ந்து நேற்று கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 4 அரசு பஸ்களை கோர்ட் ஊழியர்கள்சிறை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.