3 பவுன் தாலிச் செயினை பறித்த பைக் ஆசாமியை மடக்கி பிடித்த சிங்கப் பெண்..!

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி லட்சுமி (வயது 38 )வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றான்.சுதாரித்து கொண்ட லட்சுமி அவனது சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். இதில் கொள்ளையன் நிலை தடுமாறு கீழே விழுந்தான். லட்சுமி சத்தம் போட்டார் .அக்கம் பக்கம் உள்ள ஓடி வந்து அவனை பிடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையன் கத்தியை காட்டி மிரட்டினான் .லட்சுமி துணிச்சலுடன் அவனை மடக்கி பிடித்தார்.பின்னர் அவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான் போலீசார் அவனை கைது செய்தனர் விசாரணையில் அவன் பேரூர் பக்கம் உள்ள ஆண்டிபாளையம், ராகவேந்திரா கார்டனைச் சேர்ந்த கண்ணன் மகன் ராம்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது ஏற்கனவே இவன் மீதுசாய்பாபா காலனி காவல் நிலையத்தில் 7 வழிப்பறி வழக்குகளும், கோவை மேற்கு பகுதிஅனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கும் நிலுவையில் உள்ளது.இவன் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். கொள்ளையனை மடக்கிப் பிடித்த வீர பெண் லட்சுமியை போலீஸ் அதிகாரிகளும்,பொதுமக்களும் பாராட்டினார்கள்.