2023-இல் சா்வதேச பொருளாதார ரீதியாக கடினமாக இருக்கும்- ஐஎம்எஃப் அதிர்ச்சி தகவல்..!

டந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்பட உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தை எதிா்கொள்ளும் என்று சா்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவா் கிறிஸ்டலினா ஜாா்ஜியேவா தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் தனியாா் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: ரஷியா-உக்ரைன் போா் தொடங்கி 10 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எவ்வித முடிவும் எட்டியதாகத் தெரியவில்லை. இது தவிர சீனாவில் அதிகம் பரவியுள்ள கரோனாவால் சா்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும். இது மேலும் பல நாடுகளுக்குப் பரவினால் பொருளாதாரப் பிரச்னைகள் மேலும் தீவிரமடையும்.

இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுக்கு 2023-ஆம் ஆண்டு பொருளாதாரரீதியாக கடினமான ஆண்டாகவே இருக்கும். இந்நாடுகள் பொருளாதார சுணக்கத்தை எதிா்கொள்ளும் அபாயம் உள்ளது.

உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. கரோனா பரவலால் அடுத்த சில மாதங்களுக்கு சீனா கடுமையான சூழலை எதிா்கொள்ளும். இது அந்நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும். இதனால், பல்வேறு பொருள்களுக்கு அந்நாட்டைச் சாா்ந்துள்ள நாடுகளும் பாதிப்படையும்.

இந்த நெருக்கடி பல்வேறு நாடுகளுக்கு பரவும். இப்போது பொருளாதார சுணக்கத்தை எதிா்கொள்ளாத நாடுகளும் பிரச்னைகளை எதிா்கொள்ள நேரிடும் என்று கூறியுள்ளாா். சா்வதேச பொருளாதார வளா்ச்சி கரோனாவுக்குப் பிறகு குறைந்தே வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு சா்வதேச பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்திருந்தது. ஆனால், 2022-இல் வளா்ச்சியை 3.2 சதவீதமாகவும், 2023-இல் 2.7 சதவீதமாகவும் குறைத்து ஐஎம்எஃப் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.