உக்ரைனில் சிக்கி தவித்த என்னை மீட்ட இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி- பாகிஸ்தான் மாணவி நெகிழ்ச்சி.!!

உக்ரைனில் சிக்கி தவித்த தம்மை மீட்க உதவி இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
அதன்படி, மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து
வரப்படுகின்றனர்.

அந்த வகையில், இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனின் எல்லைப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள மாணவர்கள் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்கப்படுகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஷபீக் என்ற மாணவியை இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பாக எல்லைப் பகுதியில் தங்கவைத்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து அந்த மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், உக்ரைனில் சிக்கி தவித்த தம்மை மீட்க உதவி இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள தாம் விரைவில் வீடு திரும்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.