தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 21.09.2025 அன்று முதுகலை உளவியல் துறையுடன் திருப்பத்தூர் மாவட்ட மனநலத்திட்டம் இணைந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் C.லிக்மி சந்த் ஜெயின், முதல்வர் முனைவர் M.இன்பவள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் . B.சக்திமாலா ஆகியோர் முன்னிலை வகிர்த்தனர்,
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்களுடன், மாவட்ட ஆட்சி அலுவலகத்தின் சுகாதாரப் பணி இணை இயக்குநர் Dr.k.மாரிமுத்து மற்றும் மாவட்ட மனநலத்திட்ட அரசு தலைமை மருத்துவமனை & மாவட்ட ஆட்ரி அலுவலகழ்றின் மனநல மருத்துவர் Dr.M.பிரபாவராணி அவர்களும் வருகை புரிந்தனர்.
கல்லூரியின் உளவியல் துறை மற்றும் நாடு நலப்பணித்திட்ட 250 மாணவிகள். பேரணியாக நின்று வாசகங்களை கையில் ஏந்தியவாறு மக்களிடையே தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்துரைகளை. எடுத்துரைத்தனர்.
அடுத்து கல்லூரியின் கலையரங்கில் சிறப்பு விருதினரான மாவட்ட உளவியல் மருத்துவர் DR.M.பிரபாவராணி உரையாற்றும் போது சிறுசிறு கண்டிப்புகளுக்கும், பிரர்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல என்றும் “மனம் எண்ணங்களின் நண்பன் என்ற நிலையில் ‘மனம்’ என்ற உதவி ஆலோசனைகளுக்கு மற்றும் 14416 என்ற எண்ணக்கு அழைக்கனம் எனக் கூறினார்.
Dr.k. மாரிமுத்து  பேசுகையில் இன்று பாலியத் திருமணம், காதல் தோல்வி ஆகியவற்றால் தற்கொலை பெருகி வருகிறது என்றும், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உரையாற்றும் போது விளையாட்டு வீரர்கள் யாரும் தோல்வியால் தற்கொலையை தேர்வு செய்வதில்லை. வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் சமமானது அவ்வகையில் நம் மனதை பக்குவப்படுத்தி உடல் அளவிலும் உள்ள அளவிலும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதே தீர்வு என்று தற்கொலை பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைந்தார்.
10க்கும் மேற்பட்ட மாதிரிகளும் கண்காட்சிகளாக வைக்கப்பட்டன. 850க்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதிமொழியை மேற்கொண்டு பயனடைந்தனர். நிறைவாக நாட்டுப் பண்ணுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது..