கோவை கடைகளில் திடீர் சோதனை…குட்கா விற்ற 6 வியாபாரிகள் கைது..!

கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டு குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள் .

உக்கடம் போலீசார் அங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கடையில் சோதனை நடத்திய போது குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உக்கடம் ஈஸ்வரன் கோவில் சேர்ந்த சிராஜ் முகமத் (வயது 53) கைது செய்யப்பட்டார்.

பாப்பநாயக்கன்பாளையத்தில் ஒரு பள்ளிக்கூடம் அருகே குட்கா விற்றதாக புலியகுளம் ,கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 42) கைது செய்யப்பட்டார். குட்கா பறிமுதல் செய்யப்பட்டது .

வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியில் உள்ள பெட்டி கடையில் நடந்த சோதனையில் குட்கா விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக முகமத் மொய்தீன் (வயது40 )கைது செய்யப்பட்டார் .

சாரமேடு ரோட்டில் ஒரு கடையில் நடந்த சோதனையில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரும்பு கடையை சேர்ந்த முகம்மது முஸ்தபா (வயது 47) கைது செய்யப்பட்டார்.

குனியமுத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் குட்கா விற்ற அம்பிகாபதி (வயது 30) ரகுபதி (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . சிங்காநல்லூர் காமராஜ் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே குட்கா விற்றதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாராம் (வயது30) கைது செய்யப்பட்டார்.குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.