கோவை பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து – ரூ.18 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்.!!

கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் சிவாஜி நகரில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. இதில் கடையில் இருந்த சோபா செட் ,டைனிங் டேபிள், கட்டில், எலக்ட்ரிக் மோட்டார், எஞ்சின், இருசக்கர வாகனம் உட்பட பல பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேதமதிப்பு ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயணைத்தனர் .இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..