1105 கிலோ கஞ்சா பறிமுதல் – 286 தாதாக்கள் கைது.!!

சென்னை: போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதை பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு 2024ல் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை போதைப் பொருள் ஆட்களை மயக்கும் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 286 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 1105 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 1920 நைட் ராவி ட் மாத்திரைகள் ஆகியவை ரூபாய் 1.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் 27 இருசக்கர வாகனங்கள், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன. 5.4.2024 அன்று சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினரால் சென்னையை சேர்ந்த சுந்தர் வயது 29 மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நந்திக்கல் கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 25.8 லட்சம் ரூபாய் மதிப்புடைய 258hbuyy கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் போதை பொருள் நுண்ணறிவு பிரிவில் 100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் செய்யப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருணை ராஜா வயது 35 என்பவனுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து 21.3.2024 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது .தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவில் 80 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் குமார் வயது 32 ஸ்டார்வின் வயது 33 கேரள மாநிலத்தைச் சேர்ந்த பைசல் வயது 28 என்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் 25.3.2024 அன்று விதிக்கப்பட்டது . தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் 8840 கிலோ ஹசிஸ் மற்றும் 9146 கிலோ சாரா ஸ் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேர் ஜெயரீஷ் நண்பனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் 26.3.2024 அன்று விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவில் 23 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பதினா வெங்கட கிருஷ்ணா என்பவருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனையும் ரூபாய் ஒரு லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 15.4.2024 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது .போதைப் பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 20 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு இடையே போதை பொருள் விழிப்புணர்ச்சி 59 நிகழ்ச்சிகள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன வாட்ஸப் நம்பர் 94984 10581 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்..