புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள்..!

புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது காவல்துறை மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதோடு புதுச்சேரி மாநிலம் ஓர் அமைதியான மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . இதனால் புதுச்சேரிக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது . வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் சுற்றுலா பயணிகளை தவிர சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் எனது அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது கடல் அரிப்பின் காரணமாக புதுச்சேரியின் கடலோர குடியிருப்புகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் விளைவாக அண்மை காலங்களில் கடல் அரிப்பின் வேகம் அதிகரித்துள்ளது இதனால் மீனவ பெருங்குடி மக்களின் வாழிடம் மட்டுமல்லாமல் வாழ்வாதாரமும் பாதிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது புதுச்சேரி பகுதிகளுக்கு இடையே தமிழக பகுதிகளும் இடையிடையே வருவதால் காரைக்காலில் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலும் முழுமையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு தேசிய கடலோர ஆய்வு மையத்தை எனது அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடற்கரை சுற்று சூழலை பாதிக்காமலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் ஒரு விரிவான கடற்கரை மேலாண்மை திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது மத்திய புவி அறிவியல் மையம் அளிக்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு விரைவாக நிறைவேற்றி மீனவர்களின் நலனை பாதுகாக்கும் புதுச்சேரி மாநில மக்களின் நலனையும் மாநிலத்தின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எனது அரசின் திட்டங்களுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் நல்கி வரும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் உங்களது ஆதரவை எனது அரசுக்கு தொடர்ந்து நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் . நம்முடைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலை போற்றிக் கொண்டாடும் இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் புதுச்சேரி விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்..