மாநில அந்தஸ்திற்கு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்- புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ நேரு அறிக்கை..!

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது புதுச்சேரியில் வாழ்ந்த தலைவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பிரஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை நவம்பர் 1 , 1954இல் மீட்டெடுத்து இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டதாக பறைசாற்றினார்கள்
இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களும் மக்களும் தற்போது இருந்திருந்தால் நம் புதுச்சேரியில் நிலவும் அவல நிலையை கண்டு வேதனை அடைவதுடன் வெக்கி தலை குனிந்து இருப்பார்கள். விடுதலைக்கு முன்பு நம் புதுச்சேரி மாநில மக்கள் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் எந்த ஒரு அடக்கு முறையும் கெடுப்படியும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கிறார்கள். இன்று புதுச்சேரி மத்தியில் ஆளும் அரசாங்கங்களால் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது .அது முன்பு ஆண்ட காங்கிரஸ் ஆட்சியாளர்களும் சரி இன்று ஆண்டு கொண்டிருக்கும் பாரதிய ஜனதா ஆட்சியாளர்களும் சரி நம் புதுச்சேரி மாநிலத்தை அடிமை மாநிலமாக நினைத்து அடக்கி ஆண்டு வருகிறார்கள். புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக வைத்துக்கொண்டு மத்திய அரசின் மூலம் நியமித்து அனுப்பப்படும் கவர்னர் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு இவர்கள் செவி சாய்ப்பதில்லை முன்பெல்லாம் மத்திய அரசு கொடையாகவும் மானியமாகவும் கொடுத்து வந்த 80 சதவீத நிதியை தற்போது 20% குறைத்து அதையும் பல பிடித்தங்களை செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வஞ்சித்து வருகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு புதுச்சேரி மக்களுக்கான மேம்பாட்டு திட்ட பணிகள் அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பல பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் தடையாக உள்ளது அதேபோல் மத்திய அரசு மூலம் நியமிக்கப்படும் உயர் அதிகாரிகளும் தடையாக உள்ளனர். இதனால் நாம் சுதந்திரம் பெற்ற நோக்கமே மாறிவிட்டது என்று நம் புதுச்சேரி மத்திய அரசின் அடிமைத்தனத்திற்கு உண்டான யூனியன் பிரதேசமாக மாறிவிட்டது . இதனை முதல்வர் ரங்கசாமி பலமுறை பல நிகழ்வுகளின் மூலம் சுட்டிக்காட்டி வேதனை அடைந்து வருகிறார் . இதற்கு உதாரணமாக இன்று நடைபெற்ற புதுச்சேரி விடுதலை திருநாள் உரை கையேட்டில் இடம் பெறாமல் இருந்த மாநில அந்தஸ்து பற்றிய வாக்கியங்களை உபயோகப்படுத்தி உரையாற்றியது அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த விடுதலை நாள் விழாவில் அரங்கேறியுள்ளது. ஆகையால் நம் புதுச்சேரி பிரஞ்சு காலணி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பிறகு மத்தியில் ஆளும் அரசுகளால் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதை மீட்டெடுக்க நம் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து பெற நாம் ஒவ்வொருவரும் இந்த நவம்பர் 1 விடுதலை நாளில் உறுதி எடுத்துக் கொண்டு புதுச்சேரியின் மாநில அந்தஸ்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்..