சூலூரில் சிறப்பு மருத்துவ முகாம்.!!

சூலூர் ஜெயமாருதி தேகப் பயிற்சி சாலையின் முன்னாள் பொருளாளர் ஆறுமுகம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச கண் குறை அறுவை சிகிச்சை முகாம் ரத்ததான முகாம் ஆயுர்வேதா சித்தா ஹோமியோ பிசியோதெரபி மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் சூலூர் எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு 20 பேர்அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர் ஆர்விஎஸ் பல் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டவர்கள் பல் சுத்தம் செய்தல் கரை நீக்குதல் பல் அடைப்பு ஆகியவற்றை மேற்கொண்டனர் RVS, சித்தா, பிசியோதெரபி மருத்துவமனை சார்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை செலவு கண்டறிந்து அவருக்கு உண்டான மருந்துகள் வழங்கப்பட்டது மருத்துவர்கள் கலந்து கொண்டு வருகை தந்த நோயாளிகளுக்கு மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, குண்டடம் திருநந்தி சித்தா அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மூலிகை டானிக் வழங்கப்பட்டது. லைன்ஸ் ரத்த வங்கிக்கு 50 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது ரத்த தானம் செய்த நண்பர்களுக்கு சிறப்பு செய்து அவர்களுக்கு பேரிச்சம்பழம், பழ வகைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எஸ் ஆர் எஸ் அறக்கட்டளை தலைவர் மன்னவன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்டிட பொறியாளர் சங்கம் சூலூர் பகுதி அனைத்து அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் பசுமை நிழல் அறக்கட்டளை அமைப்பினர், தமிழ்ச்செல்வி அறக்கட்டளை தர்மராஜ், ஆர் வி எஸ் இன்ஜினியரிங், நர்சிங் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர் முகாமினை Ln.தர்மராஜ், பசுமை நிழல் விஜயகுமார், S.A.சசிகுமார், S.A.ராஜேந்திரன்,சூ ப. சிவகுமார், உரம் கௌதமன், பசுமை நிழல் சுந்தர்ராஜ், வெற்றிச்செல்வி, டால்பின் மாரிமுத்து செந்தில்குமார் கபாலி ராஜா, வசந்தகுமார், சஞ்சய் குமார், சுரேஷ்குமார், விஜயகுமார், மோகன், பிரித்திவிராஜ் ஆகியோர் முன்னின்று முகாமில் நடத்தினர்