கோவையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இருவர் உயிரிழப்பு : அதிர்ச்சி அளிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் 

கோவையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இருவர் உயிரிழப்பு : அதிர்ச்சி அளிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் 

பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் குணா இருவரும் நண்பர்கள் இன்று விடுமுறை தினம் என்பதால் ஊழியரை சுற்றிப்பார்க்க சென்று விற்று இன்று மதியம் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி அருகே அதிவேகமாக முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்லும் பொழுது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது

இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் இப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் குறித்து ஆழியார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்