கோவை விமான நிலையத்தில் ரூ 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல்- 2 பேர் சிக்கினர்..!!

கோவை : வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவரப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து நேற்று காலை கோவை விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முகமது ஆசீம் ( வயது 32 )ஹாஜியார் அலி ( வயது 30) ஆகிய 2 பேர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்ததில் மொத்தம் 500 கிராம் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும் .இதை தொடர்ந்து 2 பேரிடம் இருந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? கடத்தலுக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா?என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.