காதலியுடன் கருத்து வேறுபாடு: வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை :மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சகர் உரையின் ( வயது 22) சக நண்பர்களுடன் சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் தங்கியுள்ளார். கோவையில் உள்ள ஒரு ஒட்டலில் வேலை செய்து வந்தார். முகநூல் மூலம் ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.பின்னர் அந்த பொண்ணுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சாகர் உரைய்ன் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் உள்ள மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.