ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்..!

கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் ஸ்ரீஜா ( வயது 16 )அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் . இது குறித்து அவரது தந்தை யுவராஜ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

இதே போல ஒத்தக்கால் மண்டபம், பூங்கா நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் .இவரது மகள் மீனாட்சி ( வயது 17) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் ருக்மணி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

கிணத்துக்கடவு பக்கமுள்ள கோதவாடியை சேர்ந்தவர் வீரமணி .இவரது மகள் சுதர்சனா ( வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 16ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தந்தை வீரமணி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் சண்முகப்பிரியா (வயது 21) புலிய குளத்தில் உள்ள அரசு கல்லூரியில் பிகாம் சி.ஏ. படித்து வருகிறார். 15-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை’இவர் அவரது வீட்டில் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன் நட்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் எங்கோ சென்று விட்டதாக சந்தேகிக்கபடுகிறது இது குறித்து அவரது தந்தை ஆறுமுகம், சரவணம்பட்டி போலீசில்புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்