கோவையில் தடையை மீறி மது விற்பனை – 22 பேர் கைது..!

கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதன், வியாழன் ,வெள்ளிஆகிய 3தினங்கள் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கோவையில் டாஸ்மாக் கடை பார், அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கே. என். ஜி புதூர் பகுதியில் மது பாட்டிலை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம் கவியரசன் ( வயது 23)ஆர். எஸ். மங்கலம் ஆரோக்கிய ஸ்டாலின் ( வயது 21 )பிரகாஷ்ராஜ் ( வயது 20)ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இதே போலகுனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு கடை முன் மது வற்றதாக தஞ்சாவூர் சிவ வேல் ( வயது 28) கைது செய்யப்பட்டார்.தொட்டிபாளையம் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 49) கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் மது விற்றதாக திருவாடானை பழனி (வயது 43) கைது செய்யப்பட்டார்.கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். 366 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.போலீசார் நகர் முழுவதும் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.