சட்டசபையில் இபிஎஸ் முகத்தை கூட பார்க்காத எஸ்.பி. வேலுமணி டீம்

மிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக தவெகவிற்கு மக்கள் வாக்களித்தனர். இதன் காரணமாக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக கூட இல்லாத வகையில் 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் இரண்டு பிரிவாக பிரிந்தனர். இதில் 25 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். சட்டமன்றத்திலும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி, விஜயகர் உள்ளிட்ட 32 மாவட்ட செயலாளர்களின் பதவியை பறித்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து இபிஎஸ்- எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு இடையே மோதல் முற்றிய நிலையில், 4 எம்எல்ஏக்கள் திடீரென தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து இரு தப்பிற்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மீண்டும் இபிஎஸ் அணியோடு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் கை கோர்த்தனர். ஆனால் மூத்த நிர்வாகிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவியை திரும்ப வழங்க இபிஎஸ் மறுத்துவிட்டார்.

பதவியை பறித்த இபிஎஸ்

புதிதாக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும், அந்த அந்த மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தை கைப்பற்றி பணியை தொடங்கியுள்ளனர். இதனால் எஸ்.பி. வேலுமணி தரப்பு கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட பேசாத நிலையானது நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சடப்பேரவையில் எதிர்கட்சி தலைவர்களுக்கான முதல் வரிசையில் 5 வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் அதிமுக எம்எல்ஏக்களுக்கு சட்டமன்றத்தில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சிறிய அறையே ஒதுக்கப்பட்டது.

எனவே எடப்பாடி பழனிசாமியை சந்திக்க கூடாது என்பதற்காக எஸ்.பி.வேலுமணி டீம் எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் காரிலேயே அமர்ந்திருந்தனர். சட்டசபை தொடங்கியதும் நேரடியாக சட்டசபை வளாகத்திற்குள் சென்றனர். மேலும் ஆளுநர் உரை முடிவடைந்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பை சேர்ந்த எம்எல்ஏக்களில் காமராஜை தவிய யாரும் அவருடன் நிற்கவில்லை. எனவே இபிஎஸ்- எஸ்.பி.வேலுமணி டீம் ஒருங்கிணைந்ததாக வெளியில் கூறப்பட்டாலும், இரு தரப்பும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நிலையிலேயே நீடித்து வருகிறது. எனவே வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவை பொறுத்தே எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் அடுக்கட்ட நடவடிக்கையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.