கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ளபனியன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 49 )இவர் தங்கம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சிவானந்தா காலனி வசிக்கும் சோமசுந்தரம் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு ரூ 1 கோடி கடன் கேட்டார்.முத்துக்குமார் முதலில் இல்லை என்று கூறினார், ‘பணத்திற்கு பதிலாக 2இடங்களை எழுதி தருவதாகவும் கூறினார்.இதை நம்பி முத்துக்குமார் சோமசுந்தத்திடம் ரூ90 லட்சம் கொடுத்தார். அதை அவர் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து முத்துக்குமார் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சோமசுந்தரம் மீது மோசடி,கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
Leave a Reply