மெட்ரோ நெட்வொர்க்… 1,200 கி.மீக்கு ஒரு கோடி பேர் பயணம்!

இந்தியா​வில் மெட்ரோ ரயில் நெட்​வொர்க் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்​துள்​ள​தாக​வும், தின​மும் 1 கோடிக்​கும் அதி​க​மான பயணி​கள் இதில் பயணிப்​ப​தாக​வும் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

இந்​தி​யா​வில் மெட்ரோ ரயில் பாதை 5 நகரங்​களில் 248 கி.மீ. ஆக இருந்​தது. இது தற்​போது 26 நகரங்​களில் 1,200 கி.மீ. ஆக விரிவடைந்​துள்​ள​தாகப் பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

பிரதமர் நரேந்​திர மோடி தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “2014-க்கு முன் இருந்த வேகத்​திலேயே மெட்ரோ விரிவாக்கம் தொடர்ந்​திருந்​தால், புனே போன்ற நகரங்​கள் பல பத்தாண்​டு​கள் காத்​திருக்க வேண்​டி​யிருக்​கும். அது ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது. இந்த வளர்ச்​சி​யால் போக்​கு​வரத்து நெரிசலில் செல​வாகும் நேரம் குறை​யும். குடும்​பத்​துடன் செல​விடும் நேரம் அதி​கரிக்​கும்.வேலைத்திறன் உயர்ந்து சிறந்த வாய்ப்​பு​கள் கிடைக்​கும். நகர்ப்​புற இந்​தி​யா​வுக்​காக இத்​தகைய மாற்​றத்தை உரு​வாக்கி வரு​கிறோம்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

ரூ.21,800 கோடி மதிப்​பிலான புனே மெட்ரோ திட்​டங்​களை மஹா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் முன்​னிலை​யில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இரு நாட்​களுக்​குப் பிறகு இத்​தகவல் வெளி​யாகியுள்ளது. ரூ.8,300 கோடி செலவி​லான 23 கி.மீ. புனே மெட்ரோ பிங்க் லைன் (பாதை 3) திறந்து வைக்​கப்​பட்​டது. மான் – மாவட்ட நீதி​மன்​றத்தை இணைக்​கும் இந்​தப் பாதை, ஹிஞ்​சே​வாடி ஐடி ஊழியர்​களின் பயணத்தை எளி​தாக்​கும்.

மேலும், ரூ.13,500 கோடி மதிப்​பிலான 2ம் கட்​டப் பணி​களுக்​கும் பிரதமர் அடிக்​கல் நாட்​டி​னார். இதில் 2ஏ (வா​னாஸ் – சாந்​தனி சவுக்), 2பி (ராம்​வாடி – விட்​டல்​வாடி) 4 (கராடி – கடக்​வாஸ்லா (சு​மார் 25.52 கி.மீ.)) 4ஏ (நால் ஸ்டாப் – மாணிக் பாக் (சு​மார் 6.12 கி.மீ.)) ஆகிய வழித்​தடங்​கள் அடங்​கும். இத்திட்​டங்​கள் புனே​யின் பொதுப் போக்​கு​வரத்தை வலுப்​படுத்​தி, குடி​யிருப்​புப் பகு​தி​கள், வணிக மையங்​கள், ஐடி மையங்களிடையி​லான இணைப்பை மேம்​படுத்​தி, நெரிசலைக்​ குறைக்​கும்​.